1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Updated : புதன், 14 ஏப்ரல் 2021 (07:15 IST)

த்ரிஷாவின் ’பரமபதம் விளையாட்டு’ படம் எப்படி? டுவிட்டர் விமர்சனம்

த்ரிஷாவின் ’பரமபதம் விளையாட்டு’ படம் எப்படி? டுவிட்டர் விமர்சனம்
த்ரிஷா நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர் 
 
த்ரிஷாவுக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு எந்தவிதமான சான்ஸும் இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் நந்தாவின் கேரக்டரில் எந்த வித சன்ஸ்பென்ஸ் இல்லை என்றும் ரிச்சர்ட் கேரக்டர் மிகவும் காமெடியாக இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்
 
த்ரிஷாவின் குழந்தையாக வரும் கேரக்டர் மட்டும் ரசிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்தில் முதல் ஹீரோ யார் இரண்டாவது ஹீரோ யார் என்ற குழப்பம் இருப்பதாகவும் படத்தில் நடித்த கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களின் நடிப்பும் சுமாராக இருப்பதாகவும் டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் கதை மற்றும் இயக்கம் சரி இல்லை என்றும் லாஜிக் இல்லாமல் படம் ஒரு நேர்கோட்டில் இல்லாமல் செல்வதாகவும் இந்த படத்தை பார்ப்பது வீண் என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ஒரு சிலர் த்ரிஷாவின் நடிப்பை பாராட்டி உள்ளனர் என்பதும் த்ரில் காட்சிகள் சூப்பராக இருப்பதாகவும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது