திரிஷாவின் "பரமபதம் விளையாட்டு" திரை முன்னோட்டம்!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (14:04 IST)

திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் அரசியல் கலந்த ஆக்ஷன் படமான பரமபதம் விளையாட்டு கடந்த ஆண்டு
பிப்ரவரி 28ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றால் கடைசிநேரத்தில் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

இதையடுத்து இந்த படம் வெளியாகுமா ஆகாதா? என யோசிக்கும் அளவிற்கு படத்தை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்படியான நேரத்தில் நாளை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படத்தை நேரடியாக வெளியிடுகின்றனர்.

திருஞானம் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நந்தா முக்கிய வேடத்திலும் ரிச்சர்ட்ஸ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள நடித்துள்ளனர்.

மருத்துவரான த்ரிஷா அரசியல்வாதிகளின் சதிக்குள் மாட்டிக்கொண்டு பின்னர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக "பரமபதம் விளையாட்டு" உருவாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :