1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (21:35 IST)

விஜய்சேதுபதியின் இந்த 3 படங்கள் எனக்கு பிடிக்கும்: ஸ்ரீதிவ்யா

விஜய்சேதுபதியின் இந்த 3 படங்கள் எனக்கு பிடிக்கும்: ஸ்ரீதிவ்யா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் என்று டுவிட்டரில் உரையாடினார். பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் 
 
அப்போது விஜய் சேதுபதி நடித்த படங்களில் எனக்கு பிடித்தது சூப்பர் டீலக்ஸ், மாஸ்டர் மற்றும் 96 என பதிலளித்தார். இன்னொரு ரசிகர் நீங்கள் சிங்கிளா என கேள்வி கேட்டபோது ’இல்லை நான் சிங்கிள் இல்லை என்னுடன் என்னுடைய சகோதரி இருக்கிறார்ம் அவர் இப்போது என்னுடன் தான் இருக்கிறார்’ என்று கூறினார் 
 
மேலும் பிடித்த மலையாள நடிகர் மோகன்லால் என்றும் பிடித்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி என்றும் ஸ்ரீதிவ்யா பதிலளித்தார். அஜித் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீதிவ்யா தல என்று கூறியுள்ளார். இதேபோல் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது