வியாழன், 15 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Murugan
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2017 (13:26 IST)

ஸ்பைடர் - டிவிட்டர் விமர்சனம்

ஸ்பைடர் - டிவிட்டர் விமர்சனம்
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் இன்று வெளியாகியுள்ளது.


 

 
இப்படத்தை இன்று காலையில் பலரும் பார்த்துவிட்டனர். பலர், பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் ஸ்பைடர் படத்தை பற்றிய விமர்சனங்களை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
 
அதில் ஏராளமானோர், படம் நன்றாக இருக்கிறது. தான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை முருகதாஸ் மீண்டும் நிரூபித்துள்ளார். படத்தின் கதை மற்றும் திரைக்கதை அருமையாக இருக்கிறது. மகேஷ்பாபு மற்றும் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. படத்தின் முதல் அரை மணி நேரம் பிரம்மோட்சவம் பார்த்த உணர்வு. சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு சூப்பர். முருகதாஸ், மகேஷ்பாபு, எஸ்.ஜே சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளனர்.

ஸ்பைடர் - டிவிட்டர் விமர்சனம்

 

 
மேலும், ஹரீஸ் ஜெயராஜின் இசை இப்படத்திற்கு பெரிய பலம் எனவும், அவரின் பின்னணி  இசை அருமையாக உள்ளது என ஒருவரும், எஸ்.ஜே. சூர்யா படம் இயக்குவதை விட்டுவிட்டு, ஏன் நடிக்க வந்தார் என இப்போது புரிகிறது என ஒருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
 
அதே நேரத்தில், படத்தின் இரண்டாம் பாகம் போராக இருக்கிறது. படம் ஃபிளாப் எனவும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.

ஸ்பைடர் - டிவிட்டர் விமர்சனம்