விஜய்யை சுற்றி கிரிமினல் இருக்கிறார்கள்: எஸ்.ஏ.சி அதிர்ச்சி தகவல்!

SAC
விஜய்யை சுற்றி கிரிமினல் இருக்கிறார்கள்: எஸ்.ஏ.சி
siva| Last Modified ஞாயிறு, 8 நவம்பர் 2020 (11:29 IST)
விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரு தந்தையாக அந்தக் கிரிமினல்களிடமிருந்து விஜyயை மீட்பது தனது கடமை என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய்யின் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும், விஜய் மக்கள் இயக்கமே புஸ்ஸி ஆனந்த் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து கூறிய எஸ்.ஏ.சி, ‘விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்று புஸ்ஸி ஆனந்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கிரிமினல்களிடம் இருந்து தனது மகனை மீட்பது தந்தையாகிய தனது கடமை என்றும் அவர் கூறி உள்ளார். விஜய் மற்றும் எஸ்.ஏ.சி விவகாரம் தொடர்ந்து நீடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :