வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (13:34 IST)

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் - ட்விட்டர் விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.

 
இந்த படத்தில் விஜய் சேதுபதி பல மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு உள்ளது.
 
இந்நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
சமூக வலைதளமான ட்விட்டரில் இப்படம் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்ட கருத்துகளை பார்க்கலாம்.
 
விஜய் சேதுபதி அசால்ட்டான காமெடி ஒன் லைனர்ஸ்!


 
ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர் திரையில் தோன்றும் அனைத்து இடங்களிலும் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.
 
கௌதம் கார்த்திக் போட்டிப்போட்டு நடித்துள்ளார்..
 
ரங்கூன் படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் தனது சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிபடுத்தியுள்ளார். இவரும் விஜய் சேதுபதிக்கு நிகராக நடித்துள்ளார்.
 
எதார்த்தமான காமெடி திரைப்படம்! 
 
இயக்குனர் ஒரு வித்தியாசமான காமெடி படத்தை விஜய் சேதுபதி முலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த படமும் விஜய் சேதுபதிக்கு வெற்றி படமாகவே இருக்கும்.
 
பின்னனி இசை மற்றும் திரைக்கதை கச்சிதம்..
 
படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை. படத்தின் வித்தியாசமான கதைக்கு ஏற்ப திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.   

என நேர்மறையான விமர்சனங்களை நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

மொத்தத்தில் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.