1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (14:08 IST)

அர்ச்சனாவை வெளியேற்றுங்கள், நெட்டிசன்கள் ஆத்திரம்: என்ன செய்யப் போகிறார் கமல்?

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் அர்ச்சனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தனக்கென ஆறு பேர்கள் கொண்ட ஒரு குரூப்பை வைத்துக்கொண்டு தன்னுடைய குரூப்பில் இல்லாதவர்களை டார்கெட் செய்து வெளியேற்றிக் கொண்டு வருகிறார்
 
மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்வது, ஒரு குறிப்பிட்ட நபரை டார்கெட் செய்வது, நாமினேஷன் செய்வது உள்ளிட்டவற்றில் அர்ச்சனாவின் பங்கு மிக அதிகமாக உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பலிகடா ஆக்கப்பட்டவர்கள் தான் சுசித்ரா, சம்யுக்தா மற்றும் சனம்ஷெட்டி 
 
அந்த வகையில் தற்போது அர்ச்சனா குரூப்பின் அடுத்த டார்கெட்டாக அனிதா உள்ளார். அனிதா கொஞ்சம் வாயாடியாக இருந்தாலும் எந்த குரூப்பிலும் இல்லாமல் தனித்தன்மையுடன் விளையாடி வருகிறார். தற்போது அர்ச்சனா குரூப்பின் டார்கெட் அனிதாவாக இருக்கும் நிலையில் கொந்தளித்து எழுந்துள்ள நெட்டிசன்கள் முதலில் அர்ச்சனாவை வெளியேற்றுங்கள் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றன. கமலஹாசன் இந்த வாரம் அர்ச்சனா மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது