இந்த வார கேப்டன் அனிதா: அர்ச்சனா குருப்புக்கு ஆப்பு வைப்பாரா?

இந்த வார கேப்டன் அனிதா: அர்ச்சனா குருப்புக்கு ஆப்பு வைப்பாரா?
siva| Last Modified திங்கள், 7 டிசம்பர் 2020 (10:46 IST)
இந்த வார கேப்டன் அனிதா: அர்ச்சனா குருப்புக்கு ஆப்பு வைப்பாரா?
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு கேப்டன் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்தந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர்களில் ஒருவரை கேப்டனாக தேர்வு செய்து வரும் நிலையில் இந்த வாரம் சற்று வித்தியாசமாக கேப்டனுக்கான டாஸ்க்கில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம் என பிக்பாஸ் அறிவித்தார்
இதனை அடுத்து பிக்பாஸ் டாஸ்க்கை அனைவரும் விளையாடிய நிலையில் இதில் அனிதா வெற்றி பெற்றதாக பிக்பாஸ் அறிவித்தார். அனிதா வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தான் இந்த வார கேப்டன் என்று முடிவு செய்யப்பட்டது

அர்ச்சனாவின் குரூப்பில் உள்ள ஒருவர் தான் இந்த கேப்டன் பதவியை பிடிக்க வேண்டும் என அதுகுறித்த தீவிர முயற்சிகளில் இருந்த நிலையில் கேப்டன் பதவி அனிதாவுக்கு போனது அர்ச்சனா குரூப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சற்று முன் வெளிவந்த புரமோவில் அனிதா கேப்டனாக தேர்வு செய்ததை சோகத்துடன் கைதட்டி வருகின்றனர் அர்ச்சனா உறுப்பினர். குருப்பிஸத்துக்கு எதிராக இதுநாள் வரை பேசி வந்த அனிதா, அர்ச்சனா குரூப்புக்கு ஆப்பு வைக்க இந்த வாரம் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் அந்த வாய்ப்பை அர்ச்சனா பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :