1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 மார்ச் 2023 (13:24 IST)

மியான்மர்-சென்னை இடையே நேரடி விமான சேவை: தேதி அறிவிப்பு..!

Flight
மியான்மர் சென்னை இடையே நேரடி விமான போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்ட நிலையில் இந்த சேவை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மியான்மர் நாட்டிற்கும், தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தன. 
 
இந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது மியான்மர் நாட்டிலுள்ள ரங்கூன் நகரிலிருந்து சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்க மியான்மர் நாட்டு விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது 
 
இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த சேவை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மியான்மர் இடையே செல்லும் தமிழக பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva