சிம்பு, த்ரிஷாவின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ விமர்சனம்

சிம்பு, த்ரிஷாவின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ விமர்சனம்
Last Modified வியாழன், 21 மே 2020 (07:39 IST)
சிம்பு, த்ரிஷாவின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ விமர்சனம்
கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக் என்ற கேரக்டரில் சிம்புவும், ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்தார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த கேரக்டர்கள் இன்னும் பல காதலர்கள் மனதில் கூடி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2010ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி என்ற பெயர் வைத்த செய்திகளும் வெளியானது
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் கௌதம் மேனன் இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது குறும்பட வடிவில் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டமாக ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற படத்தை கெளதம் மேனன் இயக்கி உள்ளார். இந்த குறும்படம் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. சிம்பு மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் போன் வசனங்கள் பேசும் காட்சிகள் கொண்ட இந்த குறும்படத்தில் சிம்புவின் மெச்சூரிட்டியான நடிப்பும் த்ரிஷாவின் அழகான அட்வைஸும் மனதை நெகிழ வைக்கின்றது

குறிப்பாக தனது கணவர் குறித்து த்ரிஷா சிம்புவிடம் கூறுவதும், அதற்கு சிம்புவின் ரியாக்சனும் மிக அருமை. மேலும் கார்த்திக் இப்பவும் ஜெஸ்ஸியை காதலிப்பதாகக் கூற அதற்கு ஜெஸ்ஸி கூறும் பதில் சூப்பர். மொத்தத்தில் இந்த குறும்படம் மீண்டும் 2010ஆம் ஆண்டு கார்த்திக் ஜெஸ்ஸிடம் கொண்டு போய் சேர்த்து விட்டது என்றுதான் கூறவேண்டும்
இந்த குறும்படத்தை பார்த்து அனைவரும் மீண்டும் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என கெளதம் மேனனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அனேகமாக லாக்டோன் முடிந்தவுடன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறும்படத்திற்கு உயிர் கொடுத்த ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :