சிம்புவின் மனைவிக்காக காத்திருக்கிறேன் - நடிகை பிந்துமாதவி ட்வீட்!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 15 மே 2020 (07:23 IST)

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, ஒர்க் அவுட் செய்வது விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் நேற்று நடிகர் சிம்பு விடிவி கணேஷுடன் சேர்ந்து சமையல் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது அந்த வீடியோவில் சிம்புவிடம் நடிகர் கணேஷ் வரப்போற பொண்ணுக்கு சமைக்கும் வேலையே இருக்காது போல" என சொன்னதும் சிம்பு கோபப்பட்டு வரபோற பொண்டாடி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலை செய்யவா வராங்க? என் பொண்டாட்டிங்க அவ சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன். உங்கள மாதிரி இல்ல... என்று அவருடன் வாக்குவாதம் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ள நடிகை பிந்து மாதவி
"சரியாக சொன்ன சிம்பு...
நாங்கள் அனைவரும் அவரை சந்திக்க காத்திருக்கிறோம்" என கூறி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ நேற்றிலிருந்து இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :