திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva

இஷான் கிஷானுக்கு தலையில் காயம்: ஐசியூவில் அனுமதி என தகவல்!

இந்திய வீரர் இஷான் கிஷான் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இலங்கை பந்துவீச்சாளர் லஹிரு என்பவர் வீசிய பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷானுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. தற்போது வந்துள்ள தகவலின்படி இஷான் கிஷான் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் கூறப்படுகிறது