1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (08:27 IST)

5 வினாடிகளில் ஒரு திரைப்படம்: சென்னை இளைஞரின் சாதனைக்கு விருது

5 வினாடிகளில் ஒரு திரைப்படம்: சென்னை இளைஞரின் சாதனைக்கு விருது
முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐந்து விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய உலகின் மிகச்சிறிய திரைப்படத்தை சென்னை போரூரை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்ற இளைஞர் இயக்கியுள்ளார் 
 
இந்த திரைப்படம் உலகின் மிகச்சிறிய திரைப்படம் என்ற சாதனைக்காக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை விருதை வென்றுள்ளது. தனது விழிப்புணர்வு குறும்படத்தை முதலமைச்சர் கையால் வெளியிட வேண்டும் என அன்பு ராஜசேகர் விருப்பம் தெரிவித்துள்ளார்
 
கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவில் 7 வினாடிகளில் திரைப்படம் உருவானதே உலகின் மிகச்சிறிய படமாக இருந்த நிலையில் அந்த சாதனையை சென்னை இளைஞர் முறியடித்துள்ளார். இந்த திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அன்பு ராஜசேகர் விருப்பம் தெரிவித்த நிலையில் அவர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.