1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (20:43 IST)

அதர்வா முரளியின் ‘குருதி ஆட்டம்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

kuruthi aattam
அதர்வா முரளியின் ‘குருதி ஆட்டம்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் அதர்வா முரளி நடித்து வரும் படங்களில் ஒன்று குருதி ஆட்டம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் குருதி ஆட்டம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கணேஷ் என்பவரது இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த திரைப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அதர்வா நடித்த குருதி ஆட்டம் படத்தின் டிரைலர் ஜூலை இருபத்தி எட்டாம் தேதி வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பொருத்து இந்த படம் வெற்றி பெறுவது குறித்து கணிக்கப்படும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.