வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (20:30 IST)

ஜான்வி கபூர் நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் ‘குட்லக் ஜெர்ரி’ டிரைலர் ரிலீஸ்

good luck jerry
கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் படட்தின் டிரைலர் தற்போது வெளளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் லைகா நிறுவனம் தயாரிப்பில் நடித்த குட்லக் ஜெர்ரி திரைப்படத்தின் ரிலீஸ் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் ஜூலை 29 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.