திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (13:26 IST)

உன் ரத்தமும் என் ரத்தமும் ஒன்றா? சூர்யா-சிறுத்தை சிவாவின் ‘கங்குவா’ டிரைலர்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய ‘கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கங்குவா’  திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் இரண்டரை நிமிடங்களுக்கும் மேலான ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரெய்லரில் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கிய கிராபிக்ஸ் காட்சிகள், சூர்யாவின் ஆவேசமான நடிப்பு, அவருக்கு இணையாக வில்லன் பாபி தியோல் நடிப்பு, தேவி ஸ்ரீ பிரசாத்தின் அட்டகாசமான பின்னணி இசை, சிறுத்தை சிவாவின் இயக்கம் என ஒட்டுமொத்த சிறப்பம்சங்கள் அமைந்துள்ளது என்பதை ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சிகள் இருப்பதை பார்க்கும் போது சூர்யாவுக்கு இந்த படம் நிச்சயம் தனது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ‘கங்குவா’ திரைப்படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva