தங்கம் போலவே உச்சம் செல்கிறது பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
தங்கம் விலை இன்றைய திடீரென உச்சம் சென்றது போல் கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று திடீரென 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 72800 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 225 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 22062 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை கடல் சில நாட்களாக மோசமாக சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் இன்று ஓரளவு பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்திருப்பதாகவும் ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva