தொடர்புடைய செய்திகள்
- வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சியில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- இன்றும் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
- ஒரே நாளில் உச்சம் சென்ற பங்குச்சந்தை.. ஜாக்பாட் அடித்த முதலீட்டாளர்கள்..!
- 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டமா?
- ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலை என்ன?
பங்குச்சந்தை 2வது நாளாக சரிவு... ஆனாலும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை..!
பங்குச்சந்தை நேற்று குறைந்த அளவில் சரிந்த நிலையில் இன்றும் குறைந்த அளவில் இரண்டாவது நாளாக சரிந்து உள்ளது. இருப்பினும் பங்குச்சந்தை மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் இந்த சரிவு சாதாரணமானது தான் என்றும் மீண்டும் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடன் உள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை இன்று 83 புள்ளிகள் குறைந்து 71,231 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 33 புள்ளிகள் சரிந்து 21,385 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
டாட்டா, கோல் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி ஆகிய பங்குகள் இன்று உயர்ந்துள்ளது என்பதும் விப்ரோ, அதானி, ஹீரோ மோட்டார், டெக் மகேந்திரா ஆகிய பங்குகள் இன்று சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva
