Daily Horoscope
✕

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Written By Siva
Updated: புதன், 29 மே 2024 (09:36 IST)
பங்குச்சந்தை நேற்று காலை ஏற்றத்தில் ஆரம்பித்தாலும் அதன் பின் படிப்படியாக சரிந்து இறுதியில் 200 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 220 புள்ளிகள் சார்ந்து 74 ஆயிரத்து 949 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 70 புள்ளிகள் சரிந்து 22,8 17 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச் சந்தை கடந்த 2 நாட்களாக சரிந்து வந்தாலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபின் உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும், பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments