Daily Horoscope
✕

10 நாட்களாக பெரிய அளவில் மாற்றமில்லாத தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: புதன், 19 ஜூன் 2024 (11:59 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை என்பதும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு கிராம் தங்கம் 6,630என்ற விற்பனையான நிலையில் தற்போது 6,690 விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 6,690 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40குறைந்து ரூபாய் 53,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,160 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 95.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,600.00எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

பத்திரிகையாளர் சௌரவ் தாஸிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! அதிரடி தகவல்...

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? - முக ஸ்டாலின் சொன்ன பதில்

முதியோர் இல்லத்தில் மறைந்த பெரியம்மாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்....

4 கிலோ குறைஞ்சி போச்சி.. சப்பாத்தி நல்லாவே இல்ல - நீதிபதியிடம் புலம்பிய அன்பில் மகேஷ்

பாகிஸ்தானில் மகளை திருமணம் செய்தாரா தந்தை? மகள் இப்போது கர்ப்பமா? என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments