Daily Horoscope
✕

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்னும் உயருமா? இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: புதன், 12 ஜூன் 2024 (11:33 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,680 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 உயர்ந்து ரூபாய் 53,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,150 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 95.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments