1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Remains Sluggish Without Major Fluctuations

ஏற்ற இறக்கமின்றி மந்தமாக வர்த்தமாகும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

share
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக மிக அதிகமான சரிவில் இருந்த நிலையில், இன்று பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி மந்தமாக விற்பனையாகி வர்த்தகமாகி வருவதாக தகவல் அறியப்பட்டுள்ளது.
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று வெறும் 30 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 74,679 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிப்டி ஏழு புள்ளிகள் குறைந்து 22,525 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ் இன்ட் வங்கி, விப்ரோ, எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்போசிஸ், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஸ்டேட் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டைட்டான், டெக் மகேந்திரா, ஆசியன் பெயிண்ட், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ், மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, ஹெச்.சி.எல் டெக்னாலஜி, அப்பல்லோ ஹாஸ்பிடல், டாடா மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்னும் சில நாட்களுக்கு பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் இன்றி மந்தமாகவே வர்த்தகமாகும் என்று கூறப்படுவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ரூ.3.47 கோடி அமெரிக்க டாலர்களை மாணவிகள் கடத்தினார்களா? 2 பேர் கைது..!