ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!
இந்தியா பங்குச் சந்தை வர்த்தகம் சில நிமிடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த நிலையில், ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்ததால், முதலீட்டாளர்களுக்கு ஏராளமான நஷ்டம் அடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து ஒரு புள்ளிகள் சரிந்து, 79 ஆயிரத்து 180 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 288 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 909 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகளும் உயரவில்லை என்றும், கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல், அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva