திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (10:44 IST)

மீண்டும் சரிந்த சென்செக்ஸ்: ஒரே நாளில் சுமார் 400 புள்ளிகள் சரிவு!

Share Market
கடந்த இரண்டு நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று திடீரென மீண்டும் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 370 புள்ளிகள் சரிந்து 57256  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 107 புள்ளிகள் சரிந்து17,016 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை பங்குச் சந்தை இன்று சரிந்தாலும் வரும் நாட்களில் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran