2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. வரும் நாட்களில் என்ன ஆகும்?
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் தற்போது 64 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து 858 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 15 புள்ளிகள் குறைந்து 19,382 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை இன்று சரிந்தாலும் இனிவரும் நாட்களில் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் எனவே முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edited by Siva