1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:49 IST)

மாதத்தின் முதல் நாளிலேயே சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Share Market
இன்று மாதத்தின் முதல் நாளிலேயே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் திடீரென 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 426 புள்ளிகள் சரிந்து 59,110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 130 புள்ளிகள் சரிந்து 17628 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மாதத்தின் முதல்நாளிலேயே பங்குசந்தை சரிந்தாலும், மீண்டும் இன்று மாலைக்குள் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்