செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (11:34 IST)

விலை குறைந்தது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை குறைக்கப்பட்டு உள்ளது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
புதிய விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் புதிய விலை ரூ. 17499 ஆக மாறி இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்
# 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
#  எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
# 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
# 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
# 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
# 5,000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்