செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (16:15 IST)

விலை குறைந்தது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!

கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 4,000 குறைக்கப்படுவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஆம், புதிய விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6ஜிபி ரேம் மாடல் ரூ. 37,999 விலையிலும், 8ஜிபி ரேம் மாடல் ரூ. 39,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
 
கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர்
# மாலி G72MP18 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.7, OIS
# 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
# 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 4,500எம்ஏஹெச் பேட்டரி