தொடர்புடைய செய்திகள்
- சென்சாரில் வலதுசாரித் தாக்கம் அதிகம்… ஓடிடிகள் படங்களை வாங்குவதில்லை – பா ரஞ்சித் ஆதங்கம்!
- தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி.. தங்கம் விலை இன்று சற்று சரிவு..!
- ரூ.82,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டுமா?
- சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு: தமிழக அரசு திட்டம்..!
- ஜிஎஸ்டி சீரமைப்பால் பால் விலை குறையுமா? அமும் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!
தங்கம் விலை இன்று சற்று குறைவு.. ஆனால் ரூ.82,000ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அதிருப்தி..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் சமீபத்தில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராமுக்கு 10 ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,220
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,210
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,760
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,680
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,149
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,138
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,192
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,104
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 143.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 143,000. 00
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
