புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (12:44 IST)

குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விகிதங்கள்: எகிறியடிக்கும் பங்கு சந்தை!

இன்று நடைபெற்று வரும் ஜி.எஸ்.டி கவுன்சிலில் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பங்கு சந்தை புள்ளிகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

இன்று கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதங்களில் ஜி.எஸ்.டி வரி விதிப்பால பல நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. முக்கியமாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியதோடு, உற்பத்தியையும் குறைத்துள்ளன.

இதனால் இன்றைய ஜி.எஸ்.டி கூட்டத்தில் வரிக்குறைப்பு பற்றி புதிய அறிவிப்புகள் வெளியாகும் என ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக வரி விதிப்பில் மாற்றங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், காலையில் சுணக்கத்துடன் தொடங்கிய பங்குசந்தை புள்ளிகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன.

தேசிய பங்கு சந்தை புள்ளியான நிஃப்டி 460 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் உயர்ந்துள்ளது. இது உள்நாட்டு நிறுவனங்களுக்கு சற்று ஆசுவாசம் அளித்துள்ளது.