வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜூன் 2025 (10:34 IST)

இன்று ஒரே நாளில் 800 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

இன்று ஒரே நாளில் 800 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றத்தில் இருந்த நிலையில், நேற்று சிறிய அளவில் தங்கம் விலை குறைந்தது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 105 ரூபாயும், ஒரு சவரனுக்கு 840 ரூபாயும் குறைந்துள்ளது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கடந்த நான்கு நாட்களைப் போலவே கடந்த ஐந்து நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,305
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,200
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,440
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,600
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,150
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,036
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   80,288
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00
 
Edited by Siva