1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Sees Volatile Trading Amid Mixed Sentiment

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

share
இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்ட நிலையில், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றமும் இன்றி இறக்கமும் இன்றி, வர்த்தகமாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில், இன்று மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தை நல்ல ஏற்றம் காணும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 50 புள்ளிகள் மட்டும் சரிந்து, 82,350 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. சென்செக்ஸ் சரிந்தாலும், நிப்டி ஏற்றத்தில் தான் வர்த்தகம் ஆகி வருகிறது. அது 7 புள்ளிகள் உயர்ந்து, 25,110 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிம்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!