வியாழன், 13 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (09:47 IST)

சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஐடி ரெய்டு.. ராணுவம் பாதுகாப்பு..!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஐடி ரெய்டு.. ராணுவம் பாதுகாப்பு..!
சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஜவுளிக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற பல்வேறு நகரங்களில் கிளைகளை கொண்ட இந்த ஜவுளிக்கடை நிர்வாகம், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 
இந்த சோதனையில், சுமார் 40 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாகசோதனைகள் காவல்துறை அல்லது துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் நடக்கும். அதேபோல் இம்முறை ராணுவத்தினர் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது.
 
Edited by Siva