தொடர்புடைய செய்திகள்
- 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம்!
- கொரோனா வார்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நோயாளி! – சென்னையில் அதிர்ச்சி
- ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா! – கன்னியாக்குமரியில் அதிர்ச்சி!
- இன்று முதல் சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை: காவல்துறை தகவல்
- அலைமோதும் கூட்டம் ... ரயில் நிலையங்களில் புது அறிவிப்பு!
விலை குறைந்தும் 35,000-த்திற்கு கீழ் குறையாத தங்கம் !!
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.35,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.4,450- க்கு விற்பனையாகிறது.
