தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.87,000-ஐ தாண்டி ரூ.88,000-ஐ நெருங்கி வந்ததையும், ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ரூ.11,000-க்கு நெருங்கிவிட்டதையும் நேற்று நாம் பார்த்தோம்.
இந்த நிலையில், நேற்று இருந்த விலையை விட இன்று தங்கம் சற்று குறைந்தாலும், ஒரு சவரன் தங்கம் ரூ.87,000-க்கு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.70-ம், ஒரு சவரனுக்கு ரூ.560-ம் குறைந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2,000 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த முழுமையான விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,950
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,880
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 87,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 87,040
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,945
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,869
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 95,560
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 94,952
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 163.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 163,000.00
Edited by Siva