1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and Silver Prices Plunge in Chennai as Market Volatility Eases

போர் நின்றாலும் தங்கம் விலை உயரவில்லை.. இன்றும் சரிவு.. சென்னை நிலவரம்..!

gold
சென்னையில் கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று மேலும் அதிரடியாக சரிந்துள்ளன. 
 
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் அரசியல் சூழல் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,000 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 1,04,000 ரூபாயாகவும் குறைந்துள்ளது. 
 
நேற்று ஒரு சவரன் 1,06,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
 
அதேபோல், 24 கேரட் ஒரு கிராம் 14,182 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,456 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையிலும் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்ற வெள்ளி, இன்று 10 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
கடந்த மார்ச் 15-ம் தேதி ஒரு சவரன் தங்கம் 1,18,080 ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது விலை படிப்படியாகக் குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம்..!