வெள்ளி, 26 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:00 IST)

ஊரடங்கு எதிரொலி: குறைந்தது முட்டை விலை !

ஊரடங்கு எதிரொலி: குறைந்தது முட்டை விலை !
இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு. 

 
இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் முட்டை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 75 பைசா குறையாமல் முட்டை விலை உயர்ந்த நிலையில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு ஒரே நாளில் 35 பைசாவாக அதிரடியாக குறைக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.