1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (12:59 IST)

கீரையின் மகத்துவம்

வாய்ப்புண்ணையும், குடல் புண்ணையும் ஆற்றும் சக்தி மணத்தக்காளிக் கீரைக்கு உள்ளது. காசினிக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஈரல் வலுப்படும், ரத்தம் சுத்தப்படுத்தப்படும். அரைக்கீரை அனைத்து வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. மேலும் கண் பார்வை, ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். 
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
 
பசளைக்கீரை ஆனது மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். 
வெந்தியக்கீரை வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். 
அகத்திக்கீரை வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். 
 
எல்லா கீரைகளிலும் உடலுக்கு ஏற்ற ஒரு குணம் உள்ளது. எனவே வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது கீரை சாப்பிடவும்.