இஞ்சி டீ எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்....

Sasikala|
இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். 

முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் அகலும். அதோடு, குமட்டல், தலைச்சுற்றல் பிரச்சனைகளும் நீங்கும். இப்போது மசாலா இஞ்சி டீயை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

 
தேவையான பொருட்கள்: 
 
இஞ்சி - 1 சிறிய துண்டு 
எலுமிச்சை - 1 
பட்டை - 2 துண்டுகள் 
புதினா இலைகள் - சிறிது 
தண்ணீர் - தேவையான அளவு
சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
 
தயாரிக்கும் முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் நசுக்கிய இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு  நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு, நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :