உறவுக்கு நான் ரெடி; பெண்களின் மறைமுக சிக்னல்கள்


Abimukatheesh| Last Updated: திங்கள், 27 மார்ச் 2017 (20:48 IST)
பெண்கள் வெளிப்படையாக கூறாமல் சில குறிப்பு மூலம் தான் உறவுக்கு தயார் என்பதை கணவர்களிடம் உணர்த்துவார்களாம். 

 


 
பெண்கள் தான் உறவுக்கு தயார் என்பதை எப்படியெல்லாம் கணவர்களிடம் குறிப்பால் உணர்த்துவார்கள் என்பதை கீழே பார்போம்.
 
மனைவி தன் கணவனுக்காக பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் அன்று இரவு விஷேசம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமாம். இதுமட்டுமின்றி, தலையில் வைக்கும் பூவில் கூட பெண்கள் தங்களின் காதலையும், ஆசையை வெளிப்படுத்துவார்களாம். 
 
வாசனை நிறைந்த மல்லி, முல்லை, சாதி மல்லி உள்ளிட்ட பூக்களை சூடியிருந்தால் அன்றைக்கு விஷேசம் இருக்கிறது என்று அர்த்தமாம். அதே சமயம் வாசமில்லாத கனகாம்பரம் சூடினாலோ, அல்லது பூக்கள் வைக்காமல் இருந்தால் எந்த விஷேசமும் இல்லையாம். 
 
இன்றைக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குறிப்பால் உணர்த்துவதில் பெண்கள் கில்லாடிகளாம். 
 
அவ்வப்போது சர்ப்ரைஸாக காதல் பரிசு கொடுக்கும் கணவனுக்கு, அவனுக்கே தெரியாத அளவிற்கு திடீர் சர்ப்ரைஸாக காதல் மழை பொழிவது மனைவிகளுக்கு பிடிக்குமாம். 


இதில் மேலும் படிக்கவும் :