தீயவர்கள் அழியும் காலம் நெருங்கிவிட்டது - திமுகவுக்கு எஸ்.வி. சேகர் ’’டுவீட்’’

sekar
Last Modified திங்கள், 8 ஏப்ரல் 2019 (11:33 IST)
வரும் தேர்தலுக்கு அனைத்து  கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். சனாதனத்தை எதிர்த்து வசைபாடியவர்கள் இன்று கோவிலுக்குச் சென்று விபூதி அடித்துக்கொள்கிறார்கள். 

இந்நிலையில் சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் விவகாரத்திற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இந்துக் கடவுளான கிருஷ்ணரைப் பற்றி தவறாகப் பேசியதற்குப்  பலரும் எதிர்ப்பு  தெரிவித்தனர்
.
sekar
இதனையடுத்து ஸ்டாலின், கி. வீரமணி சர்ச்சையாகப் பேசியிருந்தால் தவறுதான் என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக  பாஜகவில் உள்ள நடிகர் எஸ்வி. சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் :

 
‘இப்பத்தான் அடிவயிற்றில் சூடு பரவுது போல் 18 ஆம் தேதி ஒரு பாரதப்போர் ஆரம்பம்.  தீயர்வர்கள் அழியும் காலம் நெருங்கிவிட்டது . கவுண்டவுன் ஸ்டார்ட் என்று தெரிவித்துள்ளார்.
sekar
எஸ்.வி.சேகரின் இந்தக் கருத்து திமுகவையும், அதன் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தையும் குறிப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
 
சென்ற வருடம் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து போலீஸாரால் தேடப்பட்டவர்தான் எஸ்.வி,சேகர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :