கமல்ஹாசன் பிரசாரத்தில் மக்கள் கூட்டம் இல்லையா ?

KAMAL
Last Updated: ஞாயிறு, 31 மார்ச் 2019 (12:53 IST)
ஸ்ரீபெரும் புதூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடத்த ஏற்பட்டிருந்தது. ஆனால் அப்பிரசாரத்தில் போதுமான  மக்கள் கூட்டம் இல்லாததால் கமல்ஹாசன் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று விட்டதாகத் தகவல் வெளியாகிறது.
ஸ்ரீ பெரும்புதூர் தொகு மக்கள் நீதி மய்யம்  வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமையான நேற்று காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்து ஒட்டு சேகரித்தார்.
 
இதனையடுத்து படப்பை வந்தார். அப்பகுதியில் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகரம் பகுதிக்கு வந்தார் ஆனால் அங்கும் மக்கள் இல்லை. இதனையடுத்து ஸ்ரீபெரும் புதூருக்கு வந்து பிரசாரம் செய்ய ஆயத்தமானார். ஆனால் அவரது கட்சி நிர்வாகிகளைத் தவிர மக்கள் கூட்டம் இல்லாத நிலையில்சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :