பழத்தை மறைச்சிட்டு பணத்தை மட்டும் காட்டாறாங்க திமுக - முதல்வர் பழனிசாமி

tamilnadu
Last Modified செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (20:07 IST)
கடந்த சில மணி நேரங்களாக வாழைப்பழம் விற்கும் ஒரு பெண்மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு முதல்வரே ஓட்டு போடும்படி பெண்ணிடம் கூறி பணம் கொடுப்பதாகவும் இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடியார் தெரிவித்துள்ளதாவது : வாழைப்பழம் வியாபாரம் செய்யும் பெண் அன்பால் கொடுத்த ஒரு சீப்புக்கான பணத்தைத்தான் நான் கொடுத்தேன் என்றும், காலையில் வாங்கிய வாழைப்பழத்தை மறைத்துவிட்டு நான் பணத்தை கொடுக்கும் காட்சியை மட்டும் திமுகவினர் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்க என்று முதல்வர்   பழனிசாமி விளக்கம்  தெரிவித்து திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார்.
tamilnadu
வாழைப்பழத்தை பெற்று கொண்டு அதற்குண்டான பணத்தை முதல்வர் கொடுத்ததாகவும், இது ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட பணம் இல்லை என்றும், வாழைப்பழத்திற்கு கொடுத்த பணத்தின் வீடியோ காட்சி தான் இது என்று அதிமுக தொண்டர்களும் கூறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :