1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (20:37 IST)

தேர்தலில் எடப்பாடியுடன் பயணிப்பீர்களா? OPS சொன்ன முக்கிய தகவல்.!!

ops
மக்களவைத் தேர்தலை ஒட்டி பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.
 
மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், அதிமுகவில் பிரிந்துள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, கூட்டணி அமைத்தால் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறலாம் என தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓபிஎஸ் கூறினார்.
 
ஒருவேளை பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், எடப்பாடியுடன் நீங்கள் பயணிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், இந்த கேள்வியை எடப்பாடி பழனிச்சாமி இடம் கேளுங்கள் என்று தெரிவித்தார். 
 
10 ஆண்டு காலமாக மத்திய பாஜக அரசு சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாகவும், பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்றும் ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார்.