வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (12:37 IST)

கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்த இளைஞர் தற்கொலை.. திருமணமான மறுநாளே சோகம்..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உயிரிழந்த ராதாகிருஷ்ணனும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்ய ராதாகிருஷ்ணன் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் சென்று புகாரளிக்க, நேற்று காவல் நிலைய வாசலில் உள்ள கோயிலில் இருவருக்கும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
 
தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகக் கூறி, பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 
இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran