வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: மதுரை , வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (19:04 IST)

பிரதமர் நரேந்திர மோடி ஜனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார் - ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார்

காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவமிகள் வேண்டு கோளின்படி, தென் மாநில கோவிலுக்கு புனித யாத்திரை மேற் கொண்டுள்ளார்.
 
அதன்படி,ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியான பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று  
மதுரை வருகை புரிந்தார்.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சுவாமிகள், சின்ன சொக்கிகுளம்  பெசன்ட் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திற்கு  வருகை புரிந்த  சுவாமிகளுக்கு மதுரை சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன்,  செயலாளர் வெங்கடேசன்  பொருளாளர் வெங்கட் ரமணி, மற்றும் ராமேஸ்வரம் சங்கர மடத்தின் நிர்வாகி ஆடிட்டர் சுந்தர்  மதுரை அனுஷத்தின் அணுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை சங்கர் மடம் வாத்தியார் ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் தலைமையில்  பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
 
பின்னர்,பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பத்திரிகையாளர்களை  சந்தித்து பேசினார்:
 
பாரத நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற  தான் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 
 
இதை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.500 வருடமாக இருந்த ராமர் கோயில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது‌.
 
பாரத நாட்டில் ராம ராஜ்யம் ஏற்பட இது வழிக்காட்டியுள்ளது‌.
வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் எந்த வித வேறுபாடும் கிடையாது‌. 
 
தென் இந்தியாவில் இருந்து நிறைய மக்கள் அயோத்திக்கு வருகின்றார்கள். அயோத்தி ராமர் கோயில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளது‌.
 
பிரதமர் நரேந்திர மோடி ஜனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார் என்று பேசினார்.