புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , செவ்வாய், 26 மார்ச் 2024 (10:53 IST)

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,பாஜகவிற்கு உடந்தையாக இருந்த இ.டி. ஐ.டி.போன்ற அதிகாரிகளின் மீது நடவடிக்கை -கார்த்திக் சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,பாஜகவிற்கு உடந்தையாக இருந்த இ.டி. ஐ.டி.போன்ற அதிகாரிகளின் மீது நடவடிக்கை -கார்த்திக் சிதம்பரம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்திப்பு: 
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியை ஒழுங்கு படுத்துவதோடு சிறுபான்மையின மக்கள் பாதிக்கக்கூடிய சட்டங்களை ரத்து செய்வோம், நீட் தேர்வு அந்தந்த மாநிலங்களின் விருப்பத்திற்கு ஏற்ப  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தனியார் கம்பெனிகளை  மிரட்டி தேர்தல் பத்திரத்தின் மூலம் பாஜக முறைகேடாக பணம் பெற்றது வெளிப்படையாகத்  தெரிந்து விட்டது.
 
காங்கிரஸ் ஆட்சிக்கு  வந்தால் அதற்கான விசாரணை கமிஷன் அமைத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.