வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (18:06 IST)

தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்..! நாளை மறுநாள் வாக்குப்பதிவு..!!

Leaders Campain
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற வந்த தேர்தல் பிரச்சாரம்  மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி  21 மாநிலங்களில் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6  மணியுடன் முடிவடைந்தது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விருதுநகர் தொகுதியில் தனது மகன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக திருமதி.பிரேமலதா விஜயகாந்த் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.