செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (12:22 IST)

அண்ணாமலை வேட்பு மனு தாக்கல்..! பாஜக - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..! கோவையில் பரபரப்பு..!!

BJP
கோவையில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, தடுப்புகளை அகற்றி உள்ளே செல்ல முயன்ற பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
 
BJP
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அண்ணாமலை, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.