திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (20:28 IST)

வேலூரில் தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை - துரைமுருகன் குற்றச்சாட்டு

கடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடியில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் கிடங்கில் ரூ. 11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் - அதிமுக சார்பில் சண்முகம் உட்பட சுயேட்சை வேட்பாளர்கள என மொத்தம் 28 பேர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்தொகுதியில் வேலூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென கடந்த 14 ஆம் தேதி ஜனாபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 
இந்தப் பரிந்துரையை ஏற்று இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துவிட்டார்.
 
ஆனால் ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து துரைமுருகன் செய்தியாளர்களுக்கு கூறியதாவது :
 
மோடி அரசை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தார்.